தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, March 30, 2012

21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் மெய்ஞ்ஞான நோக்கம்


21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் மெய்ஞ்ஞான நோக்கம்

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.
திருமந்திரம்-2008
விளக்கம்
அணுவுக்கும் அணுவான அடிப்படைத்துகள்களை((ப்ரோட்டான்=>குவார்க்=>க்ளுவான்!!!???))
ஆயிரம் துண்டாக்கி, அதில் ஒருதுண்டுக்குள், நுண்ணியதாக உள்ள பரமாணுவை நெருங்க கூடியவர்களுக்கு; பரம்பொருளை அடைதுலும் கைகூடும்.


மேற்கண்ட இருநிகழ்வுகளிலும் நோக்கமும், செய்முறியும் எந்தளவுக்கு ஒத்துபோகின்றது என்று தாங்களே நன்கு உணர்வீர்…. ஏனெனில் நாம் இதை தற்பொழுது “மதிப்பெண்களுக்காக” படிக்கவில்லை.

ஒர் இயற்பியல் மாணவனாக சில கேள்விகள்
க(1). இத்திருமந்திரத்தையே கிரேக்கர், எகிப்த்தியர். ரோமாணியர் போன்றோர் எழுதியிருந்தால் தங்களின் நிலைப்பாடு என்னவாகியிருந்திருக்கும்?

(2). ஒரு தமிழர் தமிழில் எழுதிருந்தால் அதில் அறிவியல் கருத்துக்கள் இருக்காதா?

(3). ஆன்மீகத்தில் அறிவியலும், அறிவியலில் ஆன்மீககருத்துக்களை(((உண்மையில் ஆன்மீகம் என்பது வேறு, கடவுள் என்பது வேறு, மதம் என்பது வேறு, மதபோதகர் என்பது வேறு,))) பிரதிபளிக்கும் நிகழ்வுகள் இருந்தால் ஏற்றுக்கொள்ளக்கூடாதா?

(4). திருமூலர் இதை நிருப்பித்து எழுதினார என்றால் கோட்ப்பாட்டு இயற்பியலில்(Theoretical Physics) எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் அதிஉயர் கணினியில்(Super Computer) கூட நிருபிக்கமுடியாது என்பதே உண்மை. எ.கா அற்புதமான இயற்பியலாளர் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பியல் கொளகை(Special Theory of Relativity), பொது சார்பியல் கொள்கைகளை(General Theory of Relativity) சோதனை செய்து கண்டுபிடிக்கவில்லை காரண காரியங்களை வைத்தே கண்டுபிடித்தார். திருமூலர் போன்ற சித்தர்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர்களாக மட்டுமல்லாமல் நம்மை விட பல பல மடங்கு மூடநம்பிக்கைகளை எதிர்த்தார்கள் என்பதே உண்மை…

No comments:

Post a Comment