தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, September 12, 2016

நாவல் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

நமது கிராமங்களில் குளக்கரை, ஆற்றங்கரை மற்றும் சாலை ஓரங்களில் வளர்ந்து இருக்கும் நாவல்பழ மரமானது, ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்க்கும்.
மார்ச் மற்றும் மே மாதங்களில் பூக்கத் தொடங்கி, ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பழங்களைத் தருகிறது.
நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.
நீரிழிவு நோய்
நாவல் பழத்தின் விதைகள் நீரிழிவு நோயை குணப்படுத்த சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ளவேண்டும்.
பின் ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை என இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்பட்டு விரைவில் குணமடையும்.
மாதவிடாய்
முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்து பட்டையை நன்கு நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, பின் அந்த தண்ணீரை ஒரு டம்ளர் சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்கவேண்டும்.
இவ்வாறு தினமும் இரண்டு வேளைகள் மற்றும் 10 நாட்கள் குடித்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது.
சிறுநீர் எரிச்சல்
சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகும் இதனை குணமாக்க நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள கொண்டு அதனுடன், ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்கவேண்டும்.
தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகள் 2நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரில் எரிச்சல் தீர்ந்து நீர்க்கட்டும் குணமாகிவிடும்.
வயிற்றுப்போக்கு
நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். இதனை இரண்டு வேளைகள் என்று 3 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.
குடல்புண்
நாவல் மரத்தின் பட்டையை எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும்.கொதிக்கும் நீரை சுண்டக்காய்ச்சிய பின் இதமான சூட்டில் வாய் கொப்பளித்து வரவேண்டும்.
தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் குடல்புண், தொண்டைப் புண் மற்றும் தொண்டை அழற்சி குணமாகும்.
மலட்டுத்தன்மை
பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயம் போல செய்து அதனுடன் தேன் அல்லது வெண்ணெய் கலந்து அளவோடு சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.
இதயநோய்
நாவல் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதய தசைகள் வலுவடைந்து, இதயம் தொடர்பான நோய்கள் குணமாகும்.

No comments:

Post a Comment