தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, January 17, 2017

கடலுக்கு அடியில் 70000 மாளிகைகள்..! - திட்டமிட்டு அழிக்கப்படுகின்றானா தமிழன்??

நடைமுறை தமிழனின் நிலைப்பாட்டை பற்றி சிந்திக்கும் போது மகாபாரதம் பற்றிய எண்ணம் உதித்தது.
தனது பாரம்பரியத்தை நிலைநாட்ட காப்பாற்ற தமிழன் போராடி வருகின்றான் ஒரு பக்கம் மறு பக்கம் உரிமைக்காக போராடுகின்றான்.
அப்போது வீரத்தமிழனான கம்பீரமாகத் காணப்பட்ட தமிழன் இன்று போராட்ட தமிழனாகவே மாறிப்போய் விட்டான். என்பதே உண்மை.
தமிழனின் சிறப்பு பற்றிய எத்தனையோ ஆதாரங்கள் பூமி முழுதும் சிதறி இருக்கும் போது மகாபாரதத்தை குறிப்பிட்டு கூற முக்கிய காரணம் உண்டு.
வீரர்களுக்கும் வாழ்க்கையை உணர்த்துவதற்கும் சிறந்த எடுத்துக்காட்டு இந்த மகாபாரதம் ஆனால் அவை எல்லாம் தெரிந்த கதையே.
இந்த மகாபாரதப் புராணத்தை வெறும் கற்பனைக் கதை என்று விமர்சிக்கும் பலர் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அவர்களுடைய விமர்சனங்களுக்கு நவீன காலத்தில் கிடைத்த ஆதாரமே கிருஷ்ணன் ஆட்சி செய்ததாக வர்ணிக்கப்பட்ட துவாரகை நகர் கடலுக்கடியில் கிடைத்தது.
கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த நகர் என்று கூறப்படும் துவாரகை ஓர் இயற்கை சீரழிவால் கடலுக்குள் மூழ்கியது. அந்த நகர் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டது.
70,000 மாளிகைகள், தங்கம், வைரம் போன்ற நகைகளால் நிறைந்திருந்தது துவாரகை என புராணக் கதைகள் குறிப்பிட்டுள்ளன.
அது இப்போது கடலுக்குள் 135அடி கீழே மூழ்கியிருக்கிறது. அதேபோல் மகாபாரத யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட கடற் தாயின் கோர தாண்டவம் இந்த நகரத்தினை முற்றாக கடழுக்குள் மூழ்கடித்ததாக கூறப்படுகின்றது.
இதன் அடிப்படையிலும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலும் மகாபாரதம் உண்மை கதை என்றும் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். ஆனாலும் மற்றுமொரு தரப்பு இதனை மாற்றி கூறி வருகின்றது.
அப்படி என்றால் இத்தனை வருடகாலங்கள் முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகள் வெளிவந்ததற்கு காரணம் என்ன? தமிழனின் வரலாறுகள் பாதுகாக்கப்படாமையே.
அதேபோன்று இன்றுவரை மர்ம நாகரீகமாக கூறப்படும் மாயன் இன மக்களின் கட்டட அமைப்பும் துவாரகை நகர கட்டட அமைப்போடு ஒத்துப்போகின்றது.
அப்படி என்றால் மாயன் இனத்தவருக்கு தமிழருடன் தொடர்பு இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. வரலாற்று தகவல்களின் அடிப்படையில் மாயன் நாகரீகம் காணாமல் போனதற்கு சரியான ஆதாரங்கள் எங்குமே குறிப்பிடப்பட வில்லை.
அப்படி என்றால் அப்போதைய தமிழர்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்களா என்ற பார்வையும் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பல கேள்விகள் பிறக்கட்டும் தமிழர் பெருமையை ஆவணங்களாக பாதுகாக்கா விட்டால் தமிழருக்கு சேர வேண்டிய பெருமை காலப்போக்கில் மாற்றமடைந்து விடும்.
அந்த வகையில் இவை ஒவ்வொன்றும் உணர்த்துவது உலகம் முழுதும் தமிழன் சிறப்பு மிக்க ஆட்சியை புரிந்து வந்துள்ளான் என்பதனையே.
அப்படிப்பட்ட தமிழன் இப்போது தமது பாரம்பரியத்தை காப்பதற்கும் உரிமைக்காகவும் போராடி வருகின்றான். இந்த விடயம் வேதனைபட வேண்டியதா அல்லது வெட்கப் படவேண்டியதா என்பது மட்டும் தெரியவில்லை.
எப்படியாயினும் பல சிறப்பு மிக்க தமிழனின் பெருமைகள் இன்றும் முழ்கிக் கிடக்கின்றன என்பதே உண்மை.


No comments:

Post a Comment