தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, February 3, 2017

கல்லறையாகிப் போன தமிழனின் பொக்கிஷம் ஆதாரத்தோடு.! - முழு உலகையும் ஆண்ட வீரத் தமிழர்கள்.!

நாட்கள் வேகமாக நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. நகரும் நொடிகள் ஒவ்வொன்றும் நாளைய எதிர்காலத்திற்கு தேவை. ஆனாலும் இறந்தகாலத்தை மீட்டிப் பார்க்கும் போது ஏமாற்றம் மட்டுமே மிச்சம்.
தமிழன் இன்று இருக்கும் நிலைக்கு ஒருவகையில் தமிழர்களும் காரணம் என்பது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.
தமிழர் வரலாறு என்பது முறையான ஆவணப்படுத்தல் இல்லாத காரணத்தினால் மாற்றம் அடைந்து வருவது மட்டும் அல்லாமல் தமிழர் பொக்கிஷங்கள் இன்னொருவர் கைக்கு மாற்றம் அடைந்து போகின்றது.
ஒட்டு மொத்த உலகையும் வீரத் தமிழர்களே ஆண்டு வந்தார்கள் என்பதற்கு பூமி முழுதும் ஆதாரங்கள் சிதறிக்கிடக்கின்றன. ஆள்வாளர்களும் இதனை ஒத்துக் கொள்கின்றார்கள். ஆனாலும் காலப்போக்கில் வரலாறுகள் மாற்றம் அடைந்தது ஏன்?
இருந்தபோதும் தமிழர் தம் வரலாறுகளும், முறையாக பாதுகாக்காமல் மறந்து விட்டதனால் அது இன்னும் ஓர் இனத்திற்கு சொந்தமாகிப் போகின்றது.
இனப்பாகுபாடு அவசியம் இல்லை ஆனாலும் ஓர் இனத்தின் பெருமையை காட்ட சிறப்பை கூறும் வரலாறுகள் மாற்றம் பெறக்கூடாது.
தாஜ்மஹால் எனப்படும் வலராற்று பொக்கிஷம் தமிழர்களின் சொத்து அது திட்டமிட்டு மறைக்கப்பட்டதோடு வரலாறும் மாற்றம் செய்யப்பட்டு விட்டது.
அவ்வகையில் காதலின் சின்னமாக இப்போது போற்றப்படும் தாஜ்மஹால் ஒரு காலத்தில் தமிழர்கள் கட்டிய சிவன் கோயில் என ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான ஆதாரங்களும் வெளிப்படுத்தப்பட்டு விட்டது.
மும்தாஜின் சமாதி என இப்போது கூறப்படும் தாஜ்மஹாலின் உண்மைப்பெயர் தேஜோ மஹாலயா. இது அப்போது ஓர் சிவன் கோயில் என பேராசிரியர் பி. என். ஓக். தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங் என்பவரே இந்த சிவன் ஆலயத்தை கட்டுவித்தவர். அவரிடம் இருந்தே தாஜ்மஹால் ஷாஜகான் மன்னர் கைக்கு சென்றுள்ளது.
அப்போது அழகிய சிவன் ஆலயமாக இருந்த இடத்தை ஷாஜகான் தனக்கு ஒப்படைக்க வேண்டும் என ஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங் மன்னருக்கு அனுப்பிய ஆணைகள் இன்றும் கூட பத்திரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அப்போதைய முகலாயர் ஆட்சியின் போது அவர்கள் கைப்பற்றும் கோயில்கள், மாளிகைகள் மற்றும் அரண்மனைகள் போன்றவை முகலாயர்களின் சமாதிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மும்தாஜ் ராணியின் முழுப்பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பதே. என்றபோதும் முக்கிய கேள்வி ஷாஜகான் மும்தாஜ் நினைவாக தாஜ்மஹாலை கட்டினார் எனில் மும்தாஜ் மஹால் என பெயர் சூட்டாமல் தாஜ்மஹால் என பெயர் சூட்டியது ஏன்? ஒரு வேளை அது செல்லப் பெயரோ தெரியவில்லை.
குறிப்பாக ஆப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் மஹால் என்கிற பெயர் எந்தக் கட்டிடத்துக்கும் வழங்கப்படுவது இல்லை எனவும் கூறபடுகின்றது.
மற்றுமொரு ஆதாரமாக தாஜ்மஹால் 1631 தொடக்கம் 1654 ஆம் வருடப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
ஆனால் 1638ஆம் ஆண்டு ஆக்ராவைப்பற்றி குறிப்பு எழுதிய அல்பேர்ட் மாண்டேஸ்லோ ( இது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளின் பின்னராக காலப்பகுதி) தாஜ்மஹால் கட்டப்படுவது தொடர்பில் குறிக்கவில்லை.
என்றபோதும் மும்தாஜ் இறந்து ஒரு வருடத்தில் ஆக்ரா வந்த ஆங்கில பயணியான பீட்டர் மண்டி (1631 களில்) தாஜ்மஹாலின் கலைநயம், கட்டட அமைப்பு தெளிவாக குறிப்பாக பதிவு செய்துள்ளார்.
இப்போதைய வரலாறு படி மும்தாஜ் இறந்தபின்னர் 20 வருடங்களின் பிறகே தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அப்படி என்றால் வரலாறு பொய் என நிரூபனம் செய்யப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று தாஜ்மஹாலின் பெரும் பகுதி இன்றும் பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல எவருக்கும் அனுமதி அளிக்கப்படாத இடங்கள் ஆகும். பல இந்து சயம வழிபாடுகள் சார்ந்த பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
அங்கு கிடைக்கப்பெற்ற தமிழரின் சொத்து தாஜ்மஹால் என்பது படிப்படியாக மறைக்கப்பட்டு விட்டன. ஓர் கோயிலின் கட்டட அமைப்பே தற்போது மாறிப்போய் விட்டது.
அந்த இடங்களில் சிவன் சிலைகளும், வழிபாடுகள் செய்யப்பட்ட இடங்களாகவும் காணப்படுவதாக பேராசிரியர் பி. என். ஓக் கூறியுள்ளார்.
தாஜ்மஹாலின் கட்டட மற்றும் சிற்ப அமைப்புகள் அனைத்தும் இந்துக் கோயில்களை எடுத்துக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மிக முக்கியமாக இந்த உண்மைகளை பி. என். ஓக் புத்தகமாக வெளியிடப்பட்ட போதும் அது இந்திரா காந்தி தலைமையில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் தாஜ் மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கவேண்டும் என்று ஆக்ரா நீதிமன்றத்தில் 6 கொண்ட வழக்கறிஞர்கள் வழக்கு தாக்கல் செய்தனர்.
இருந்தபோதும் அந்த வழக்கு எடுபட வில்லை. அதனைத் தொடர்ந்து இந்திய தொல்பொருள் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது தாஜ் மஹால் .
ஓர் இனத்தின் பெருமை அதன் தொன்மையிலேயே தங்கி உள்ளது அதன் படி அவை மாற்றம் அடைந்து போய் விட்டால் எதிர் காலத்தில் அந்த இனத்தின் பெருமையும் அழிந்து போகும்.
அதன்படி ஆவணப்படுத்துதல் மூலம் தமிழர் இனத்தின் பெருமையை சேமித்து வைக்க முயலுவோம், இல்லையேல் தமிழர் பெருமை அழிய தமிழர் நாமே காரணமாக போய்விடுவோம்.

No comments:

Post a Comment