தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 12 மார்ச், 2017

அபானமுத்திரை - (சர்க்கரைநோய், வாயுக்கோளாறுகளை கட்டுப்படுத்தும்):



நமது மோதிர விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொடும்படி வைத்து மற்ற இரண்டு விரல்களையும் நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.
பஞ்சபூத தத்துவப்படி கட்டை விரல் (பெருவிரல்) நெருப்பை குறிக்கும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிர விரல் பூமியையும் குறிக்கும். இந்த முத்திரையில் ஆகாயம் மற்றும் பூமியின் சக்தி அதிகமாகவும் நெர...ுப்பின் சக்தி குறைவாக இருக்கும்.

இந்த முத்திரை செய்யும்போது ஆகாஸ் முத்திரை மற்றும் பிரித்வி முத்திரையின் சக்தியும் கிடைக்கிறது. உடலில் இருக்கும் கெட்ட சக்திகளை நீக்கி உடல் உறுப்புகளை சக்தியுடன் இயங்கச்செய்கிறது.
இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும் குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம்.

அபான முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:

• இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.
• இது வாயுக்கோளாறையும், மலச்சிக்கலையும், வயிறு சார்ந்த
நோய்களையும் நீக்குகிறது.
• இது மூல நோயை குணப்படுத்துகிறது.
• இது மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்துகிறது.
• இது கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்களை குணப்படுத்துகிறது.
• இது உடல் உள் உறுப்புகளில் உள்ள கெட்ட சக்திகளை நீக்கி உறுப்புகள்
சக்தியுடன்
இயங்கச்செய்கிறது.
• இது மனதை அமைதிப்படுத்துகிறது.
• இது தன்னம்பிக்கையும், ஞாபகசக்தியை அதிகப்படுத்துகிறது.
• இது வியர்வை குறைவாக இருப்பவர்களுக்கு வியர்வையை
அதிகப்படுத்துகிறது.
• இது ஜீரண சக்தியை நன்றாக செயல்பட வைக்கிறது.
• இது சிறுநீர்ப்பை கோளாறுகளை சரி செய்கிறது.
• இது உடல் முழுவதும் உள்ள வெப்ப எரிச்சலை சரி செய்கிறது.
• இது உடலில் உள்ள கழிவு நீக்கும் உறுப்புகள் நன்றாக செயல்பட்
வைக்கிறது.

இந்த முத்திரையை வயிற்றுபோக்கு மற்றும் வாந்தி சமயத்தில் பயிற்சி செய்யக்கூடாது. இந்த முத்திரையை மகப்பேறு காலத்தில் முதல் 8 மாதங்களுக்கு இந்த முத்திரை பயிற்சி செய்யக்கூடாது. 8 மாதம் முடிந்தபின் இந்த முத்திரை பயிற்சி செய்தால் குழந்தைப்பேறு பிரசவம் சிரமமில்லாமல் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக