தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 17 ஏப்ரல், 2017

ஐந்து தலை பாம்பு பற்றிய உண்மை இரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா?

ஐந்து தலை பாம்பு என்று இருக்கிறதா? இல்லையா? என்ற விவாதங்கள் ஆன்மீக ரீதியாக பலர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், ஐந்து தலை நாகம் என்பது உருவகமாக மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்வழியில் நடக்க கூறப்பட்ட ஒரு விஷயமாக தான் இருக்கிறது. அதை மனிதர்கள் ஆன்மீக வழியாக அறியவே சிவபெருமானின் ஆபரணமாக ஐந்து தலை நாகம் என்ற கூற்று கூறப்பட்டுள்ளது.
இங்கு ஐந்து தலை நாகம் மூலம் மனிதர்கள் அறிய வேண்டியது என்ன? அதன் இரகசியங்கள் என்ன? என்பது பற்றி காணலாம்...
சிவன்!
சிவபெருமான் தனது தலை, கழுத்து, கைகளில் என உடலில் பாம்பினை ஆபரணமாக அணிந்துள்ளார். இதற்கு பின்னணியில் விசேஷ காரணங்கள் உண்டு.
ஐம்புலன்!
அந்த விசேஷ காரணம் மனிதனுக்கு கண், மூக்கு, வாய், செவி, மெய் எனும் ஐம்புலன்கள் தான்.
தீயவை!
இந்த ஐம்புலன் தீய வழிகளில் ஈடுபடும் போது, மனிதர்கள் விஷம் கக்கும் நாகம் போல துன்பத்திற்கு ஆளாவார்கள். எனவே தான் ஐம்புலனை அடக்கி அடக்கி நல்வழியில் வாழ்ந்தால், வாழ்க்கை அழகுற ஆபரணம் போல அமையும்.
ஐந்து தலை நாகம்!
இதை மனிதர்களுக்கு உணர்த்தவே நாதனாகிய சிவபெருமான் ஐந்து தலை நாகப்பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார் என கூறப்படுகிறது. பாம்பின் ஐந்து தலையும் ஐம்புலனையும் குறிக்கும் வகையாக அமைகிறது.
தங்கள், வெள்ளில், பித்தளை!
இந்த விசயத்தை வெளிப்படுத்தும் விதமாகவே தங்கம், வெள்ளி, பித்தளையால் ஆன நாகத்தை லிங்கத்தின் மீது ஆபரணமாக மாட்டுகின்றனர். நாக லிங்கத்தினை தரிசித்தால் தீய எண்ணங்கள் குறைந்து, நேர்மறை எண்ணம் அதிகரிக்கும், நல்ல எண்ணங்கள் பிறந்து மனதில் தெளிவு பிறக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
- See more at: http://www.manithan.com/news/20170417126460?ref=builderslide#sthash.JU10PEZw.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக