தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 மே, 2017

5 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி: விலகாத மர்மம்!

கடந்த 1938-ல் பெருவில் தனது 5 வயதில் குழந்தையை பெற்றெடுத்த லீனா என்ற சிறுமியே மிகக் குறைந்த வயதில் குழந்தை ஈன்ற தாய் ஆவார்.
தென் அமெரிக்க நாடான பெருவின் டிக்ராப்போவில் கடந்த 1933ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி சில்வர் ஸ்மித் மற்றும் விக்டோரியா லோசியா ஆகிய தம்பதிகளுக்கு லீனா மகளாக பிறந்தார்.
லீனாவுக்கு 5 வயதான போது அவரின் வயிறு பெரிதாகி கொண்டே போனது. இதையடுத்து அவரின் பெற்றோர் அவரை பிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
லீனாவை சோதித்த மருத்துவர்கள் அவர் 7 மாதம் கர்ப்பமாக உள்ளதை உறுதி செய்தனர்.
இதை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் லீனா தனது 5 வயது 7 மாதங்கள் இருக்கும் போது 6 பவுண்ட் எடையுள்ள ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார்
இந்த விவகாரம் வெளியில் தெரிந்த போது சர்வதேச மருத்துவத்துறையே மிரண்டு போனது.
பின்னர் தனது குழந்தைக்கு ஜெரார்டோ என லீனா பெயர் வைத்தார். சிறுமி கர்ப்பமான விவகாரம் தொடர்பாக அவரது தந்தை சில்வர்ஸ்மித் கைது செய்யப்பட்டு அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது.
ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர் மருத்துவ குழுவின் பரிசோதனையில் லீனாவிற்கு 3 வயது முதலே மாதவிலக்கு ஏற்பட்டது தெரியவந்தது.
பின்னர், ரால் ஜூராடோ என்பவரை திருமணம் செய்த லீனா, 1972ல் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார்.
இது நடந்து பல வருடங்கள் ஆன போதிலும், லீனா 5 வயதில் கருவுறுவதற்கு காரணமானவர் யார் என்ற மர்மம் மட்டும் இன்னும் விலகவில்லை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக