தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, July 18, 2017

இராமர் பாலத்தால் மனித இனத்தின் தோற்றத்தில் ஏற்படுத்தியுள்ள புதிய சர்ச்சை!

இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை வரை நீண்டுள்ள பாலமே இராமர் பாலம் (Rama's Bridge) அல்லது ஆதாமின் பாலம் (Adam's Bridge) என அழைக்கப்படுகின்றது.
சுமார் 30 கி.மீ நீளம் சுண்ணாம்பு கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளே இந்த பாலம் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த பாலம் 17 லட்சம் ஆண்டுகள் பழமையான பாலம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் பூமியில் மனித இனம் தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் தான் ஆகி இருக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகளின் கணிப்புக்கள் கூறுகின்றன.
இவ்வாறிருக்கும் போது 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இராமர் பாலத்தால் மனிதர்கள் தோற்றம் பற்றிய கணிப்புகள் விஞ்ஞானிகளுக்கு கேள்விக்குள்ளாக்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், “குறித்த பாலம் இந்து தெய்வாம்சமான இராமரால் கட்டப்பட்டது. அத்தகைய பாலம் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆகவே உலகில் மனித இனம் தோன்றியதாக நாம் கணித்தது தவறாகின்றது. நாம் நினைத்ததை விட நீண்ட காலமாக மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள், என்பதற்கான ஆதாரமே இது” என சிலர் கூறுகின்றனர்.
இருப்பினும், கடல் அமைப்புகளில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு புவியியலாளரான சுவாட்ரர் கெர் “இது இயற்கையானது” என்று கூறியுள்ளார்.
அந்த வகையில், இந்தியாவின் புவியியல் ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனரான டாக்டர் எஸ். பத்ரிநாராயணன் மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.ஓ.ஓடி) இன் ஆய்வுப் பிரிவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர், பாலத்தின் சில மாதிரிகளை ஆய்வு செய்துள்ளனர்.
குறித்த ஆய்வுகளில் இருந்து இது உண்மையில் மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,
இது ஒரு இயற்கையான உருவாக்கம் அல்ல, அது மேல் பகுதியில் ஒரு மனிதனால் கட்டமைக்கப்பட்டுள்ளது .
இந்த பாலம் முதலில் வங்காள விரிகுடா மற்றும் தெற்கே இந்தியப் பெருங்கடலை பிரிக்கும் ஒரு இயற்கை தரப்பிரிப்பாகும். எனவே, புவியியல் அம்சங்கள் இருபுறமும் வேறுபடுகின்றன.
அதன் மேலே கடல் மணல் உள்ளது. அது கீழே பவளப்பாறைகளின் கலவையான கூட்டமாக உள்ளது.
“ஆச்சரியமாக அது 4-5 மீட்டர் அதாவது 13-16 அடி வரை உள்ளது.
மீண்டும் நாம் அதில் தளர்வான மணலை கண்டுபிடித்தோம். கடினமான அமைப்புகள் அங்கு இருந்தன.
பவளப்பாறைகள் மற்றும் கற்பாறைகளுக்கு கீழே, நாம் தளர்வான மண்ணைப் பெறுகிறோம், அதாவது அது இயற்கை அல்ல என கூறியுள்ளனர்.
இதன்மூலம் இராமர் பாலம் இயற்கையானதா செயற்கையானதா என்ற கேள்விகளுக்கு அப்பால் மனித இனத்தின் தோற்றத்திலும் சர்ச்சையையும் சந்தேசத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/statements/01/152316

No comments:

Post a Comment