தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, July 20, 2017

உறங்கும் முன் இதை செய்தால்.. ஒரு அதிசயம் நடக்கும்

இரவில் ஆழ்ந்த நல்ல உறக்கத்தை பெறுவதற்கு, உறங்கும் முன், ஒரு சுவாசப் பயிற்சியை செய்ய வேண்டும்.
அதை பின்பற்றுவது எப்படி தெரியுமா?
சுவாசப் பயிற்சியை செய்வது எப்படி?
முதலில் கண்களை மூடிக் கொண்டு, நாக்கை வாயின் மேல் கூரையில், மேல்வாய் பற்களின் பின்புறத்தை நாக்கால் தொட வேண்டும்.
நாக்கை சரியான நிலையில் தொட்ட பின், மூச்சை வாயின் வழியாக வெளியேற்றி விட்டு, வாயை மூடிக் கொண்டு, மூக்கின் வழியாக 4 வரை எண்ணிக் கொண்டே மூச்சை உள்ளிழுத்து, 7 வரை எண்ணிக் கொண்டு மூச்சைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் மூச்சை மெதுவாக வெளிவிட வேண்டும். இந்த மூச்சு பயிற்சியை இரவில் தூங்கும் முன் தொடர்ந்து 4 முறைகள் செய்து வந்தால், இரவில் படுத்ததும் உறக்கம் வந்துவிடும்
குறிப்பு
இந்த மூச்சு பயிற்சியின் போது, மூச்சை வாயின் வழியாகத் தான் வெளியிட வேண்டும். இதனால் மன அழுத்தம் குறையும்.
http://news.lankasri.com/health/03/129101?ref=right_featured

No comments:

Post a Comment