தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

யாழ் மாவட்டத்தைச் சுற்றி எத்தனை கடல்கள் உள்ளன தெரியுமா? ஆபத்தானவை எவை தெரியுமா?



யாழ்ப்பாணத்தின் தனித்துவங்களில் முக்கியமானது கடல்களாகும். என்ன? கடல் ஒன்றுதானே? அது எப்படி கடல்கள் என்று வரும்?" என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
ஆம், யாழ்ப்பாணத்தைச் சுற்றி கடல் இருக்கிறது என்பதைவிட கடல்கள் இருக்கின்றன என்பதுதான் பொருத்தமானது. யாழ்ப்பாணத்தில் கடல்கள் உள்ளன. அது எப்படி?
யாழ்ப்பாணத்தைச் சுற்றி எத்தனை கடல்கள் உள்ளன தெரியுமா? ஆபத்தானவை எவை தெரியுமா?
ஒன்றுக்கொன்று வித்தியாசமான பண்புகளைக்கொண்ட கடல்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ளன.
சேற்றுக்கடல், கல்லுக்கடல், மணற்கடல் என்பனவே அவை. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பண்புகளைக் கொண்டனவாகும்.
தீவுகள் உள்ளிட்ட குடாநாட்டின் கரையோரங்களைப் பார்க்கின்றபோது, கிளிநொச்சி மாவட்டத்திற்கும் யாழ் மாவட்டத்திற்கும் இடையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் கடநீரேரி அமைந்துள்ள பகுதி உட்பட கொழும்புத்துறை, குருநகர், பாசையூர், யாழ் நகர், கல்லுண்டாய், அராலி, வேலணை, காரைநகரின் தென்பகுதி அனைத்தும் சேற்றுக்கடலாக விளங்குகின்றன.
பாக்குத் தொடுகடல் அமைந்துள்ள தீவுகளின் மேற்குப் பகுதி, காரைநகரின் மேற்கு-வடக்கு, மாதகல், கீரிமலை, காங்கேசன்துறை, மயிலிட்டி, வல்வெட்டித்துறை வரை கல்லுக் கடலாக விளங்குகின்றது.
பருத்தித்துறையிலிருந்து வடமராட்சி கிழக்கின் சுண்டிக்குளம் வரையான பகுதி மணற் கடலாக விளங்குகின்றது.
இந்த மூன்று வகையான கடல்களும் ஆபத்தானவைதான். சேற்றுக் கடற் பகுதியில் சுரிகள் காணப்படும். இவை ஆழமற்ற பகுதியாக இருந்தாலும் இறங்கி நடப்பவர்களை விழுங்கிவிடும் தன்மை வாய்ந்தவை.
நீந்துவதால் உண்டாகும் களைப்பினைவிட இதனுள் இறங்கி நடப்பதால் உண்டாகும் களைப்பு அதிகமானது. யாழ்ப்பாண நகரத்தின் தெற்கே இந்தச் சுரிகள் ஆங்காங்கே நிறைந்துள்ளன. யாழ்ப்பாணக் கோட்டையைச் சுற்றியுள்ள அகழியும் சுரிகளால் நிறைந்ததே.
யாழ்ப்பாணத்தைச் சுற்றி எத்தனை கடல்கள் உள்ளன தெரியுமா? ஆபத்தானவை எவை தெரியுமா?
கல்லுக்கடல் பகுதியும் ஆபத்தானதே, சற்றுச் செல்லச்செல்ல இதன் ஆழத்தை உணரலாம். ஆழ நீரோட்டங்கள் கடற்பாறைகளுடன் மோதுவதால் சுழிகளை உருவாக்குகின்றன. இந்தச் சுழிகள் கரைநோக்கியும் சுழல் கற்றின் பாதைபோல வருகின்றபோது அகப்படுபவர்களை இழுக்கும் சக்தி வாய்ந்தன. இவ்வாறு இழுக்கப்படுபவர்கள் பாறைகளுடன் மோதுவதற்கான நிலைமைகளும் அதிகம்.
யாழ்ப்பாணத்தைச் சுற்றி எத்தனை கடல்கள் உள்ளன தெரியுமா? ஆபத்தானவை எவை தெரியுமா?
மணற்கடல் சற்று வித்தியாசமானது. இதன் அலைகள் ஆபத்தானவை. ஒரே தூக்கில் கரையை நோக்கித் தள்ளவும் முடியும் உள்ளே இழுக்கவும் முடியும். முறையான நீச்சல் பயிற்சி இல்லாதவர்கள் இந்த அலையுடன் மோதமுடியாது. அதைவிட இதன் ஆழம் என்பது மிகவும் அதிகமானது. கரையிலிருந்து இருபதடி தூரம் ஒருவரை மூழ்கடிக்கும் தன்மையுடையது. மிகச் சடுதியான தரையிறக்கமே இதற்கு காரணம்.
யாழ்ப்பாணத்தைச் சுற்றி எத்தனை கடல்கள் உள்ளன தெரியுமா? ஆபத்தானவை எவை தெரியுமா?
ஆக சேற்றுக்கடல், கல்லுக் கடல், மணற் கடல் என்பன யாழ்ப்பாணத்தைச் சுற்றிக் காணப்படும் மூன்று வகையான கடல்கள் என்பது புலனாகின்றதல்லவா!
அழகான தீவுகளாலும் குடாக்களாலும் கடநீரேரிகளாலும், பரவைக் கடலாலும் சூழப்பெற்ற யாழ்ப்பாணக் குடாநாட்டின் கடல்வளம் என்பது அபரிமிதமானது. இங்கு பிடிபடும் நண்டுக்கும் இறாலுக்கும் கணவாய்க்கும் மீன்களுக்கும் தனிச்சுவை உண்டு!
இலங்கைத் தீவிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாடு தனித்துவமிக்கதாக விளங்குவதற்கு உள்ள பல காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
http://www.jvpnews.com/srilanka/04/138735

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக