தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, September 1, 2017

இந்தியா மற்றும் கிரேக்க நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் ஒரே மாதிரியான ஒற்றுமைகள்!


உலகில் ஆங்காங்கே ஒரேப் பழக்கம் உடைய நபர்கள், ஒரே மாதிரி தோற்றமளிக்கும் நபர்கள், அல்லது ஒரே மாதிரியான இடங்கள் என சில விஷயங்கள் ஒத்துப்போவது சாதாரணமான ஒன்று தான். ஆனால், கண்டங்கள் தாண்டி இருக்கும் இரு நாடுகளின் கடவுள் சம்பந்தப்பட்ட புராணங்கள் ஒன்று போல அமைவது என்பது கொஞ்சம் வியக்கத்தக்க விஷயம் தான்.
ஆம், இந்தியா மற்றும் கிரேக்க நாடுகளின் கடவுள் சம்பந்தப்பட்ட புராண கதைகளும், கடவுள்களும் ஒன்று போலவே இருக்கிறது. நமது இந்தியப் புராணமான மகாபாரதத்தின் பாஞ்சாலி கதாப்பாத்திரம் போல கிரேக்க நாட்டில் "ஹெலன் ஆப் ட்ராய்" என்பவருக்கு ஏற்பட்ட அநீதியின் காரணமாக போர் நிகழ்ந்துள்ளது. அந்த போரின் முடிவில் ஓர் நகரமே தீக்கிரையாக்கப்பட்டு அழிந்துப் போயுள்ளது.
இது மட்டுமில்லாது, பல விஷயங்கள் நமது இந்தியா மற்றும் கிரேக்க நாட்டிற்கு இடையேயான புராணங்கள் ஒன்றுப் போலவே நிகழ்ந்துள்ளது. அதைப் பற்றி இனி காண்போம்
நமது கலாச்சாரத்தில் இந்திரன் எனும் கடவுள் நீருக்கு அதிபதியானவர். மழை மற்றும் இடி மின்னல் இவரது சக்தி ஆகும். இவரை கடவுகளின் அரசன் என்று அழைப்பார்கள். இது போலவே கிரேக்க நாட்டு கலாச்சாரத்தில் ஜீயஸ் எனும் கடவுள் மழை மற்றும் இடி சக்தி பெற்ற கடவுளாகவும், கடவுள்களின் அரசனாகவும் கருதப்படுகிறார்.
ஹெர்குலஸ் - கிருஷ்ணன் மெகஸ்தனிஸ் எனும் கிரேக்க நாட்டவர் இந்தியாவில் இருந்து கிருஷ்ண பரமாத்மாவின் கதையினை கிரேக்க நாட்டிற்கு எடுத்து சென்று, ஹெர்குலஸ் என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின் ஹெர்குலஸ் கதைகள் கிரேக்க நாட்டின் புராணக் கதைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாம். ஹெர்குலஸ் மற்றும் கிருஷ்ணாவின் இடையே பல ஒற்றுமைகள் ஏற்படுவதனால், ஹெர்குலஸ் என்பவர் கிருஷ்ண பரமாத்மா தான் என்று கருதப்படுகிறது.
பிரம்மா, விஷ்ணு, சிவன் : ஜீயஸ், ஹேட்ஸின் மற்றும் போஸிடான் இந்திய கலாச்சாரத்தில் எப்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்றவர்கள் முக்கிய கடவுள்களாக கருதப்படுகின்றனரோ, அதேப் போல கிரேக்க நாட்டில் ஜீயஸ், ஹேட்ஸின் மற்றும் போஸிடான் போன்றவர்கள் மூன்று முக்கிய கடவுள்களாக கருதப்படுகின்றனர்.
முறையே இந்த இரு நாடுகளிலும் இவர்கள் சொர்க்கம், கீழ் உலகம், மற்றும் கடலின் அதிபதிகளாக உருவகுக்கப்பட்டிருக்கின்றனர்
சொர்க்கம், நரகம் மனிதர்களின் பாவப் புண்ணிய செயல்களுக்கு ஏற்ப சொர்க்கம், நரகம் என்று தண்டனைகள் வழங்கப்படுவது போல, கிரேக்க நாட்டுக் காலச்சாரத்திலும் தண்டனை பூமி, சொர்க்க பூமி என கூறப்படுகிறது.
லக்ஷ்மி - அஃப்ரோடைட் நமது புராணத்தில் லக்ஷ்மி எப்படி கடலில் தோன்றியவர் எனவும், அழகு மற்றும் அன்பிற்கான வழிபாட்டுக் கடவுளாக திகழ்கிறாரோ அதே போல கிரேக்க நாட்டில், அஃப்ரோடைட் எனும் பெண் கடவுள் கடலில் பிறந்து/தோன்றி, அன்பிற்கான கடவுளாக வணங்கப்படுகிறார்.
முருகன் மற்றும் ஏரிஸ் ஏரிஸ் என்பவர் கிரேக்க கடவுள் ஜீயஸின் மகனாவார். இவர் பெற்றோரிடம் சண்டையிட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. ஆயினும், ட்ரோஜன் போரில் தீயவர்களை அழிக்க இவர் எதிர்த்து போரிட்டதாக புராண கூற்றுகள் கூறுகின்றன.
இதே போல தான் முருகன் தனது பெற்றோரிடம் சண்டையிட்டுப் பிரிந்து சென்றார், ஆயினும் தேவர்களை காப்பதற்காக சூரனை அழிக்க எதிர்த்து போரிட்டார். இந்த இரு செயல்களும் ஒன்று போலவே அமைந்திருப்பது மிகவும் வியக்கத்தக்கது ஆகும்.
திரௌபதி - ஹெலன் நமது இந்தியப் புராணமான மகாபாரதத்தின் பாஞ்சாலி கதாப்பாத்திரம் போல, கிரேக்க நாட்டில் "ஹெலன் ஆப் ட்ராய்" என்பவருக்கு ஏற்பட்ட அநீதியின் காரணமாக "வார் ஆப் ட்ராய்" என்ற போர் நிகழ்ந்துள்ளது. இதனால் அந்த ஊரே தீக்கிரையாகிப் போனது. மகாபாரதத்திலும் திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அநீதியின் காரணமாக தான் குருச்சேத்திரப் போர் நடந்து ஓர் ஊரே தீக்கிரையாகிப் போனது.
கர்ணன் மற்றும் அக்கிலிஸ் கர்ணன் எப்படி வெற்றிக்காகவும், உயர்வுக்காகவும் போரிட்ட ஓர் மாவீரானாக திகழ்ந்தாரோ.
அதேப்போல கிரேக்க நாட்டின் அக்கிலிஸ் மாவீரனாக இருந்தார். இவர்கள் இருவரும் நேர்மையானவர்களாக இருப்பினும் தவறான பக்கம் இருந்து போரிட்டவர்கள். இவர்கள் இருவரும் யுத்தத்தில் அம்புகள் மார்பில் எய்ததால் மரணம் அடைந்தவர்கள்.
துவாரகா மற்றும் அட்லாண்டிஸ் துவாரகா மற்றும் அட்லாண்டிஸ் ஆகிய இந்த இரு நகரங்கள் போரின் முடிவில் ஏற்பட்ட எதிர்பாராத இயற்கை சீற்றத்தினால் அழிந்து போயின.
இந்த நிகழ்வுகள் அனைத்துமே இந்தியா மற்றும் கிரேக்க புராணங்களுக்கு இடையே ஒத்துப்போவது உண்மையிலேயே மிகவும் வியக்கத்தக்கதாக தான் இருக்கிறது.

No comments:

Post a Comment