தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 நவம்பர், 2017

ஏலக்காய் மருத்துவம்! இது ஆண்களுக்கு மட்டும்!

ஊட்டச்சத்து குறைவான உணவுகள், சரியான உடல் வேலையின்மை, சோம்பேறித்தனம், உட்கார்ந்தே வேலை செய்வது என பல காரணிகள் இரத்த ஓட்டம் சீர்கெட காரணமாக அமைகிறது.

சரியான உடற்பயிற்சி மட்டுமின்றி, நீங்கள் சில சரியான உணவுகளை தெரிவு செய்தாலே இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண முடியும்.
உடலில் இரத்த ஓட்டம் சீரின்றி இருப்பது தான் ஆண்களின் விறைப்புத்தன்மை கோளாறுக்கும் முக்கிய காரணம்.

இதற்கு ஏலக்காய் எப்படி ஒரு சிறந்த இயற்கை தீர்வாக இருக்கிறது என இங்கு காணலாம்...

அத்திப்பழம், மாதுளை போன்றவற்றுடன் ஏலக்காயில் இருக்கும் ஒரு மூலப்பொருள் தான் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

ஏலக்காயில் இருக்கும் சினியோல் எனும் மூலப்பொருள் இரத்த ஓட்டம் அதிகரிக்க முக்கிய காரணமாக விளங்குகிறது. இது ஆணுறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்க தூண்டுகிறது.

ஏலக்காயில் புரதம், பொட்டாசியம், இரும்பு, சோடியம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், வைட்டமின் எ, பி, மற்றும் சி என நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன.

ஏலக்காய் எப்போதும் சிறிதளவு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் உணவில் சேர்ப்பது, அளவிற்கு மீறினால் அமுதும் நஞ்சு என்பது போல ஆகிவிடும். இதை டீ அல்லது தேன், சுடுநீரில் கலந்து உட்கொண்டு வரலாம்.

தினமும் ஏலக்காயை டீயில் அல்லது தேனில் சேர்த்து குடித்து வந்தால், ஏலக்காயில் இருக்கும் நற்குணங்களால் நரம்பு தளர்ச்சி சரியாகும், நரம்புகள் வலுபெறும். தினமும் காலை, மாலை இருவேளை குடித்து வர நல்ல பலன் பெறலாம். மட்டுமின்று மனதிற்கு புத்துணர்ச்சியும் கிட்டும்.

http://news.lankasri.com/health/03/134180

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக