தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

வாஸ்துப்படி இந்த திசையில் ஜன்னல் வைத்தால் நல்லது


ஒரு வீட்டிற்கு தலைவாசல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோல் முக்கியத்துவம் வாய்ந்தது ஜன்னல்கள்.
வடக்கு திசை
வடக்கு ஜன்னல் என்பது நம்முடைய வீட்டில் வடகிழக்கு பகுதியில் வடக்கு சுவற்றில் வரக்கூடியது.
வடக்கு ஜன்னல் வீட்டின் ஆண்களின் வருமானத்தை தீர்மானிப்பது. எனவே வடக்கு ஜன்னலை பகல் முழுவதும் திறந்து வைப்பதே நல்லது.
கிழக்கு திசை
கிழக்கு ஜன்னல் என்பது நம்முடைய வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிழக்கு சுவற்றில் வரக்கூடியது.
இந்த கிழக்கு ஜன்னலே வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தை தீர்மானிப்பது. அதுமட்டுமல்லாது பெண்களின் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கவல்லது. இந்த கிழக்கு ஜன்னலே பெண்களின் வருமானத்தை தீர்மானிப்பது.
கிழக்கு பகுதியில் ஜன்னல் இல்லாமல் இருப்பதும், ஜன்னல்கள் இருந்தும் திறந்து வைக்காமல் இருப்பதும் இரண்டுமே தவறானதாகும். அதனால் கெடு பலன்கள் அந்த வீட்டில் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதில் ஆண், பெண் இருவருக்குமே நிரந்தர வேலையில்லாத நிலைமை ஏற்படக்கூடும். திருமணத்தடை,கண் பார்வை, காது கேளாத நிலை,அதிகப்படியான கற்பனைக்கு ஆளாகி மனநலத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
வடக்கு, கிழக்கு இரண்டு பகுதி ஜன்னல்களுமே மிக முக்கியமானது.
கொசு, பூச்சி, தூசி வராமல் இருக்க எப்பொழுதுமே ஜன்னல் மூடி வைப்பவர்களது வீட்டில் கெட்ட பலன்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே பகல்முழுவதும் திறந்தே இருப்பது நல்லது.
வடகிழக்கு திசை
வடகிழக்கு திசை ஜன்னலை எப்போதுமே மூடி வைப்பது அவசியம். இல்லாவிடின் அந்த வீட்டையே கோமா நிலையில் உள்ள வீடுகள் என்று சொல்லப்படும்.
தென் கிழக்கு திசை
வீட்டிற்கு தென் கிழக்கு பகுதியில் வரக்கூடிய ஜன்னல், சமையலறை ஜன்னல்கள் என்று சொல்லப்படுகின்றது.
இங்கு ஜன்னல் வருவதால் அந்த வீட்டின் சமையல் எப்பொழுதுமே சுகாதாரமானதாகவும், இயற்கையான சுவையானதாகவும் இருக்கும்.
வீட்டிற்கு தெற்கு, மேற்கு பகுதிகளில் வரக்கூடிய ஜன்னல்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடையாது.
தென்மேற்கு திசை
தென்மேற்கு படுக்கை அறையில் வரக்கூடிய ஜன்னல்கள் மட்டும் அந்த அறையில் தென்மேற்கு பகுதியில் வரதா வண்ணம் பார்த்துக்கொள்வது அவசியமனதாகும். அப்படி வரும் பட்சத்தில் பகலில் திறந்து இரவில் மூடி விடலாம்.
ஜன்னல் இருந்து திறந்து வைக்காமல் இருப்பதும், ஜன்னல்கள் இல்லாத அமைப்பில் குடியிருப்பதும் தவறு.
இதனால், வீட்டில் காற்றோட்டம் இல்லாமல் உடல்நிலை பாதிக்கக்கூடிய வாய்ப்புள்ளது.

http://news.lankasri.com/astrology/03/171442?ref=ls_d_others

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக